மின் திருட்டு : "அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது" - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

மின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.
மின் திருட்டு : அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
x
மின் திருட்டு தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் திருட்டில் ஈடுபடுவர்களிடமிருந்து 50 சதவீதம் அபராதம் வசூலித்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக  அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மின்சார திருட்டுக்கும், நகை திருட்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என அரசுக்கு கேள்வி எழுப்பினார். திருடுவது என்பதே குற்றம் என்கிற போது மின் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் அபராதம் விதித்து பிரச்சினையை முடித்ததாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், மின்சாரம் திருடப்பட்டுள்ளது என்பதை முடிவு செய்வது யார், அபராதமாக எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது என்றும், காவல்துறையில் ஏன் புகார் கொடுப்பதில்லை என்பது குறித்தும், மின்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்