சகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்

உடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
x
உடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. கண்ணாடிபுதூர், வாழை, கரும்பு தோட்டம் என கடந்த 15 நாட்களாக சுதந்திரமாக சுற்றி திரிந்த சின்னதம்பி யானை பிடிபட்டது. லாரி மூலம் வரகளியாறு பகுதிக்கு சின்னதம்பி கொண்டுவரப்பட்டது. அங்கு மரக்கூண்டுசிறை அருகில் கும்கி யானைகளான கலீம், சுயம்பு, தமிழன், பாரி, சிவகாமி ஆகிய 5 யானைகள் தயாராக இருந்தன. சின்னதம்பியின் கால், கழுத்தில் கயிறு கட்டிய வனத்துறையினர், அதனை லாரியில் இருந்து கீழே இறக்கி மரக்கூண்டில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, நோய் எதிர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து மருந்து சின்னதம்பிக்கு செலுத்தப்பட்டது. மரக்கூண்டில் தும்பிக்கையை வைத்தபடி, சின்னதம்பி பார்த்தது மிகவும் பரிதாபமாக இருந்தது. இந்த யானைக்கு, முகாம் பழக்கவழக்கங்கள் குறித்து ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், இன்னும் 2 மாதத்தில் சக யானைகளுடன் சகஜமாக பழகும் என்றும் வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்