சிக்கியது சின்னத்தம்பி யானை...

உடுமலை பகுதியில் சுற்றித் திரிந்து சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பி, வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின் சிக்கியுள்ளது
x
சின்னத்தம்பி யானையை காயமின்றி பிடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த‌தை தொடர்ந்து நேற்று முதல் யானையை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளுடன் முயற்சித்து வந்தனர்.  இன்று காலை வனதுறையினரும், மயக்க ஊசிகளுடன் மருத்துவர் குழுவினரும் , களம் இறங்கினர். நான்கு மயக்க ஊசிகள் செலுத்தியும் சற்றும் அசராமல், வாழை தோட்டத்திற்குள் புகுந்த சின்னத்தம்பி யானை, வனத்துறையினரையும் கும்கி யானைகளையும் திணறடித்த‌து. பின்னர் சிறிது சிறிதாக மயக்க நிலையை அடைந்த சின்னத்தம்பி யானையை கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் லாவகமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 



"இறுதி வரை யாரையும் தாக்காத சின்னத்தம்பி" 

இத்தனை நாட்கள் ஆட்டம் காட்டினாலும்,  அவ்வப்போது மரங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தியதே தவிர, மனிதர்கள் யாரையும் சின்னதம்பி தாக்கவில்லை. இதனால், யானையை பார்க்க மக்கள் குவிந்து வந்த‌தால், கண்ணாடிபுத்தூர் பகுதி சுற்றுலா தளமாகவே காட்சியளித்து. இறுதி வரை யாரையும் தாக்காமல் சிக்கியுள்ள சின்னத்தம்பி, மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்