செம்மொழி நிறுவனத்தை புறக்கணிப்பது தமிழை அவமதிக்கும் செயல் என ஸ்டாலின் குற்றச்சாட்டு - மாஃபா பாண்டியராஜன் பதில்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
செம்மொழி நிறுவனத்தை புறக்கணிப்பது தமிழை அவமதிக்கும் செயல் என  ஸ்டாலின் குற்றச்சாட்டு - மாஃபா பாண்டியராஜன் பதில்
x
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், நிதி ஒதுக்காமல், மத்திய அரசு தாய் மொழியை அவமானப்படுத்தி வருவதாக அதிருப்தி தெரிவித்தார். செம்மொழி நிறுவனம் முழுமையாக செயல்பட மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், பெரும்பாக்கத்தில் அடுத்த 3 மாதங்களில் செம்மொழி தமிழாய்வு நிறுவத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளுடன் வளாகம் ஏற்படுத்தப்படும் என்றார். இந்த நிறுவனத்திற்கு இன்னும் ஒரு மாதத்தில் நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படுவார் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்