இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பன்னீர்செல்வம்

இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இறுதி துணை நிதிநிலை அறிக்கை : ரூ.17,714 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பன்னீர்செல்வம்
x
சட்டப்பேரவையில் துணை நிதி நிலை அறிக்கையை முன்வைத்து பேசிய அவர் 2019 ஆம் ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காக 2ஆயிரத்து 19 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

* ஊதியத் திருத்தத்தின் படி ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆயிரத்து 322 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் கூறினார்.

* வறட்சி மற்றும் கஜா புயலினால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படுவதற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பேசினார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு தொகுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் விடுப்புக்கால ஊதியம் போன்றவற்றிற்காக ஆயிரத்து 986 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்