"அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்" - துரைமுருகன்

அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இதுதான் - துரைமுருகன்
x
பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், அதில் எத்தனை நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கி இருக்கின்றன? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது என்ற விவரங்களை எல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதில் பேசிய தொழில் துறை  அமைச்சர் சம்பத், 2015 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களில் 64 நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்றும்,  அதில் 28 உற்பத்தியை துவக்கி விட்டன என்றார். மீண்டும் பேசிய துரைமுருகன், அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும் என தான் நம்புவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்