ராகு பகவான் கோயிலில் இரண்டாம் கால யாக பூஜை
பதிவு : பிப்ரவரி 13, 2019, 03:51 AM
ராகு-கேது பெயர்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி கும்பகோணம் அருகில் உள்ள ராகு பகவான் கோவிலில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரக கோவிலான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் தனி சன்னதியில் மங்கள ராகுவாக ராகுபகவான் இருக்கிறார்.  இன்று பகல் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி முதல்கட்ட லட்சார்ச்சனை முடிந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.  ராகு பகவானுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.  இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.