காதலர் தினத்தை அலங்கரிக்கும் ரோஜா மலர்கள்

உலகம் முழுவதும் காதலர் தினத்தன்று, காதலர்கள் கையில் தவழ, தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் ரோஜாக்கள் பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
x
நாளை மறுநாள் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினம் என்றவுடன் நினைவுக்கு வருவது, ரோஜா... ரோஜா மலர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து அறிவதற்காக ஓசூர் சென்றோம்... 

ஓசூரின் பல பகுதிகளில், ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட் ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாமலர்கள் சாகுபடி  செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மலர்கள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா என பல பகுதிகளில் ஏற்றுமதி செய்யபடுகின்றன.  

கடந்த ஆண்டுகளில், ஓசூரில் இருந்து மட்டும் ஒரு கோடி அளவிலான ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு ஏற்றுமதி மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பூக்களின் விலை அதிகரித்துள்ளதால், இந்த இழப்பை ஓரளவிற்கு ஈடு செய்ய முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இதேபோல சேலம் மாவட்டம் கருமந்துறை, செம்பரக்கை மலைப்பகுதிகளிலும், நெல், கரும்பு, வாழை என பயிரிட்ட விவசாயிகள்,  காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா மலர் சாகுபடிக்கு மாறியுள்ளனர். 

இந்த மாற்றம் சரியானது தானா என்பது, காதலர் தினம் முடிந்த பிறகே தெரிய வரும் என விவசாயிகள் கூறுகின்றனர். மொத்த‌த்தில்,  விலை அதிகரித்த போதும்,  உற்பத்தியும், வெளிநாட்டு ஏற்றுமதியும் குறைந்துள்ளதால், மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் மலர் விவசாயிகள்... தட்ப வெப்ப மாற்றங்களை சமாளிக்கும் வகையில், வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்