வி.சி.க ஒன்றிய செயலாளர் வெட்டி கொலை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டார்.
வி.சி.க ஒன்றிய செயலாளர் வெட்டி கொலை
x
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டார். செல்வசூரன்  அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ராஜசேகருக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக திருமணமானவர்கள் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகே தென்னந்தோப்பில் இருந்த செல்வசூரனை, ராஜசேகர் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த செல்வசூரனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜசேகரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்