சிறு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் : திட்டத்தை செயல்படுத்த 13 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 08:41 AM
விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு  அறிவித்த ஊக்கத்தொகை திட்டத்தை  செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையில். சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், 5 ஏக்கர் நிலத்திற்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக செலுத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில்  13 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.  தமிழகத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான அரசாணையும்  வெளியிடப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.