இந்தியாவில் கல்வி துறையில் சிறந்த விளங்குவது தமிழகம் - மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர்

உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் கூறியுள்ளார்.
இந்தியாவில் கல்வி துறையில் சிறந்த விளங்குவது தமிழகம் - மாலத்தீவு கல்வித்துறை அமைச்சர்
x
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் இளையோர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியகத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாலத்தீவு அரசின் கல்வி துறை அமைச்சர் ரஸீத் அஹ்மத் ஆகியோர் கலந்துக்கொண்டனர். விழாவில் பேசிய ரஸீத்,  
உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரிவதாக கூறினார். இந்தியாவில் தமிழகம் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குவதாகவும், அறிவு ரீதியாகவும், கலை ரீதியாகவும் மாணவர்கள் திறமை மிக்கவர்களாக உள்ளனர் என்று புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்