ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கு பிப்.20 ந்தேதிக்கு ஒத்தி வைப்பு...

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கை பிப்.20 ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கு பிப்.20 ந்தேதிக்கு ஒத்தி வைப்பு...
x
தூத்துக்குடி முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்த வித போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என சிந்தா என்பவர் தொடர்ந்த வழக்கு, வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.  ஸ்டெர்லைட்  ஆலை போராட்டம் அனுமதி வழங்க கோரிய மனுக்கள்,  சட்ட விரோத கைது  தொடர்பான  வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் கிருபாகரன்,  சுந்தர்  அமர்வு,  இந்த மனுக்களை, போராட்டத்திற்கு தடை  விதிக்க கோரிய மனுக்களோடு சேர்த்து விசாரிப்பதாக கூறி  விசாரணையை பிப்ரவரி 20-க்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்