ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...

ஸ்டெர்லைட் வழக்கில் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...
x
ஸ்டெர்லைட் வழக்கில், தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த ஒரு வாரமாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ' நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி விசாரணை நடந்தது.  தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆலையை திறக்கக் கூடாது என வாதிட்டார். இதனையடுத்து வரும் திங்கட்கிழமைக்குள் இருதரப்பு வாதத்தையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்