பெற்றோரின் 50வது மணநாள் விழாவுக்கு வந்த மகன் பலியான பரிதாபம்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 02:42 PM
தாய், தந்தையின் 50வது திருமண நாளை கொண்டாட டெல்லியில் இருந்து குமரி வந்த மகன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலியூர்குறிச்சி...கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது...டெல்லியில் வசிக்கும் சதீஷ்,  பெற்றோரின் 50வது திருமணநாளை கொண்டாட சொந்த ஊரான புலியூர்குறிச்சிக்கு குடும்பத்துடன் வந்தார்.... வீட்டருகே உள்ள தெப்பகுளத்தில் உறவினர்களுடன் குளிக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக சதீஷின் மகன் அனீஷ்(19) குளத்தில் மூழ்கினார். 

அதிர்ச்சியடைந்த சதீஷூம் அவரது உறவினர் அகிலேஷூம் அனீஷை மீட்க சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்களும் குளத்தில் குதித்து உயிரை காப்பாற்ற உதவி செய்தனர். கரை சேர்ந்த 3 பேருக்கும் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷ் உயிரிழந்தார். 

மற்ற 2 பேரின் உயிரை காப்பாற்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், தனியார் ஆம்புலன்சில் ஆக்சிஜன் காலியானதால் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்த உறவினர்கள், அரசு மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி உதவி கேட்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி ஆக்ஸிஜன் சிலிண்டர் கொடுக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்ததால் அங்கு கடும் வாக்குவாதம் உருவானது. இதனால், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

341 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3954 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5858 views

பிற செய்திகள்

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 views

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது

17 views

பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

10 views

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.

106 views

மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்

தமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

8 views

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

408 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.