நாகூர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா : பார்வையாளர்களை கவர்ந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகள்

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
நாகூர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா : பார்வையாளர்களை கவர்ந்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகள்
x
புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்திற்காக ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரிலிருந்து நாகைக்கு கொண்டுவரப்பட்டது.  பின்னர் சிறப்புக்கொடியை எடுத்து வரும் கப்பல் வடிவ ரதம், செட்டி பல்லக்கு, சாம்பிராணி சட்டி போன்ற ரதங்கள் நாகை மீரான் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக நாகூரை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் நின்றிருந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தாரை, தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலத்தை வரவேற்றனர். பின்னர் கொடிக்கு துவா ஓதப்பட்டு வாணவேடிக்கை முழங்க, நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள 5 மினாராக்களிலும் கொடியேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்