350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை : கர்நாடகாவிற்கு கொண்டு செல்ல தீவிர முயற்சி

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை, கிருஷ்ணகிரி மாவட்டம் மார்கண்டேயன் நதி கரையை கடந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை : கர்நாடகாவிற்கு கொண்டு செல்ல தீவிர முயற்சி
x
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை, கிருஷ்ணகிரி மாவட்டம் மார்கண்டேயன் நதி கரையை கடந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

350 டன் எடை கொண்ட இந்த சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரி மூலம் கடந்த டிசம்பர் 7ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது. பல்வேறு தடைகளை கடந்து கிருஷ்ணகிரியை அடுத்த குருபரபள்ளி வந்தடைந்த அந்த சிலையை, மார்கண்டேயன் நதிக்கரையில் மண் சாலை அமைத்து கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன.

மூன்று முறை மண் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றதை தொடர்ந்து ஆற்றின் மறு கரையை கோதண்டராமர் சிலை கடந்தது. எனினும், தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்ல இயலாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.கர்நாடகா மாநில எல்லை பகுதியான அத்திபள்ளியை சென்றடைய இன்னும் 50 கிலோ மீட்டர் தூரத்தை சிலை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்