தக்கலை மேம்பாலம் திட்டத்திற்கு எதிர்ப்பு : வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மேம்பாலம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி வணிகர்கள் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தக்கலை மேம்பாலம் திட்டத்திற்கு எதிர்ப்பு : வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்
x
தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பதற்காக மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த பாலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மக்கள் நடமாட்டமின்றி பேருந்துநிலையம், சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. வர்த்தகர்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் விதமாகவும் அமைய இருக்கும் மேம்பால திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.  நாளை கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்