சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு...

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு...
x
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா தரப்பில் இந்த முறையீட்டு மனு தொடரப்பட்டுள்ளது. யானை - மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அவரது மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் உடுமலை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் 3 நாட்களாக முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்