மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - அமைச்சர் காமராஜ்

மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார்.
x
திருவாரூர் அருகே திருக்கரவாசலில் தொடங்கி கரியாபட்டிணம் வரை விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து, கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்ட குழுவினரை அமைச்சர் காமராஜ் சந்தித்து, மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என உறுதி அளித்தார். போராட்டத்தை கைவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே  போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி, போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்