டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் பள்ளி விழா : தந்தி டிவி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு

சென்னையை அடுத்த புழலில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 16 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் பள்ளி விழா : தந்தி டிவி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு
x
சென்னையை அடுத்த புழலில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 16 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன், பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியின் தலைவர் சின்னமணி நாடார், முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமத்துவ மக்கள் கழக தலைவருமான எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் பூமிநாதன், செயலாளர் தங்கமுத்து, செயல் அலுவலர் கோவிந்தசாமி, பள்ளி முதல்வர் ஷீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்