இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு : அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம் அருகே மூணாறில் உறைபனி சூழ இதமான தடபவெப்ப நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
x
கேரளா மாநிலம் மூணாறில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வழக்கத்தை விட வெகுவாக குறைந்துள்ளது. மைனஸ் ஒரு டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சென்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறு முழுவதும் உறை பனி சூழ்ந்து இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. கன்னிமலை, குண்டளை, அருவிக்காடு, மாட்டுப்பட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், வயல் வெளிகளை உறைபனி சூழ்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலாப்பயணிகள் கூட்டமாக கூடி நின்று இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்