சென்னையில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற சாகச போட்டி
சென்னையில், 15 கல்லூரிகளின் என்.சி.சி. மாணவர்களுக்கான சாகச போட்டிகள் நடைபெற்றது.
சென்னையில், 15 கல்லூரிகளின் என்.சி.சி. மாணவர்களுக்கான சாகச போட்டிகள் நடைபெற்றது. வண்ணாரப் பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரியில், என்.சி.சி. மாணவர்களுக்கு இடையே 12 போட்டிகள் நடைபெற்றன. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நெருப்புச் சக்கரம், டிரில் அணி வகுப்பு, கலை நிகழ்ச்சி என மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபித்தனர். நாளை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
Next Story

