விரைவில் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்ஸ் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில்  விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், 400 பயனாளிகளுக்கு தலா 50 நாட்டு கோழிக் குஞ்சுகள் கூண்டுகளுடன் வழங்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரைவில் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்