பணம் நகைகளை எடுத்துக் கொண்டு மனைவி மாயம், உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த கணவர்

2ஆம் திருமணம் செய்து கொண்ட மனைவி தன்னை ஏமாற்றி விட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கணவர் புகார் அளித்துள்ளார்.
பணம் நகைகளை எடுத்துக் கொண்டு மனைவி மாயம், உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்த கணவர்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் ஏற்கனவே விவாகரத்தான நிலையில், மஹாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மகாலட்சுமியும் ஏற்கனவே விவாகரத்தானவர். கடந்த 2017ல் இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் உதயகுமார் சிங்கப்பூர் சென்றுள்ளார். ஆனால் சொந்த ஊருக்கு திரும்பிய உதயகுமாருக்கு, தன் மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களிலேயே வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்துடன் மஹாலட்சுமி மாயமாகி உள்ளார். அவருடைய மின்னஞ்சலை சோதனை செய்ததில் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்ததாக உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உதயகுமார் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்