ரயில்வேயில் பணி நியமனத்தில் முறைகேடு புகார்
ரயில்வே துறையில் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனுவுக்கு பதிலளிக்க சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, இதனை சாதாரண ஊழலாக எடுத்து கொள்ள முடியாது என்றார். மேலும், இந்த முறைகேடுகள் தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளி வரும் என்றார். பின்னர் வழக்கு தொடர்பாக பதிலளிக்க சிபிஐ தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
Next Story