மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளி

கோவையில் இயற்கை விவசாயத்தை மாணவர்களுக்கு கற்றுத் தரும் பள்ளி
x
கோவையில் இயற்கை விவசாயத்தை மாணவர்களுக்கு கற்றுத் தரும் பள்ளி 

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயற்கையான சூழலுக்கு மத்தியில் செயல்பட்டு வருகிறது ஒரு தனியார் பள்ளி. இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம், ஓங்கி உயர்ந்த கட்டடங்களை தாண்டியும் பளிச் என கண்களை கவர்வது பள்ளியின் இயற்கை தோட்டம் தான்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காய்கறிகளை பயிரிடுதல், அதனை பராமரித்தல், அறுவடை செய்தல் என அனைத்தையும் கற்றுத் தருகிறார்கள். முழுவதும் இயற்கை விவசாயத்தை பின்பற்றி கற்றுத் தரப்படுவதால் ஆரோக்யத்தின் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது என்கிறார் பள்ளியின் நிர்வாகி அரவிந்த்.

இந்த பள்ளியில் வெண்டை, கத்திரி, தக்காளி, பீர்க்கங்காய், சுரைக்காய், கீரைகள் என பல வகையான பயிர்களும் விளைவிக்கப்படுகிறது. மாறி வரும் காலத்திற்கேற்ப விவசாயத்தின் அருமையை மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்கள்

கல்வி கற்றுத் தரும் இடமாக மட்டுமின்றி மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு இடமாக கல்விக் கூடங்கள் மாறுவது இங்கே அவசியமான ஒன்றாகவே இருக்கிறது

Next Story

மேலும் செய்திகள்