தேக்கம்பட்டு புத்துணர்வு முகாமில் புத்துணர்வு பெற்று திரும்பிய யானைகள்

தேக்கம்பட்டு புத்துணர்வு முகாமில் பங்கேற்று, சொந்த இடங்களுக்கு திரும்பிய யானைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேக்கம்பட்டு புத்துணர்வு முகாமில் புத்துணர்வு பெற்று திரும்பிய யானைகள்
x
கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவுபெற்றது. இதையடுத்து அந்த யானைகள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றன.  பழனி தண்டாயுதபாணி கோயில் யானை கஸ்தூரிக்கு, சிறப்பு பூஜையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 ஆயிரத்து 890கிலோ எடையுடன் சென்ற யானை 50கிலோ குறைந்து 4 ஆயிரத்து 850 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக திரும்பியிருப்பதாக பாகன் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலெட்சுமிக்கு, உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட யானை, கஜபூஜைக்கு பின்னர்,  
நந்தவன கலையரங்கில் கட்டபட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் வந்த யானை அபயாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கரும்பு,வெல்லம் ஆகியவை யானைக்கு வழங்கப்பட்டது. பின்னர், கோயில்  வளாகத்தில் யானை உற்சாகமாக வலம் வந்தது.இதேபோல, ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்திருநகரி யானைகள் மீண்டும் கோயிலுக்கு வந்து சேர்ந்தன. யானைகள் லட்சுமி, குமுதவல்லி, ஆதிநாயகியை அதன் பாகன்கள்  பாதுகாப்பாக லாரியிலிருந்து இறக்கினர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு யானைகள், கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்