செங்கோட்டை, நாகர்கோயில் வாராந்திர ரயில் ரத்து

சென்னை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் அடுத்த 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை, நாகர்கோயில் வாராந்திர ரயில் ரத்து
x
சென்னை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் அடுத்த 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. திங்களன்று மட்டும் இயங்கி வந்த  செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் பிப்ரவரி 12 முதல் மார்ச் 26 வரையும், சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் வரை வெள்ளி தோறும் இயங்கி வந்த வாராந்திர சிறப்பு ரயில், பிப்ரவரி 2 முதல் மார்ச் 26ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. வியாழன் தோறும் நாகர்கோவில் - சென்னை வாராந்திர சிறப்பு கட்டண ரயில் பிப்ரவரி 6 முதல் மார்ச் 27 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய வரவேற்பு கிடைக்காததால், இவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்