"வன்கொடுமை சட்டம்: பழிவாங்குவதற்காக பயன்படுத்த கூடாது" - நீதிபதி எச்சரிக்கை

வன்கொடுமை தடைச் சட்டத்தை, பழிவாங்குவதற்காக தவறாக பயன்படுத்த அனுமதித்தால் அது ஜாதி வெறுப்புணர்வையே அதிகரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வன்கொடுமை சட்டம்: பழிவாங்குவதற்காக பயன்படுத்த கூடாது - நீதிபதி எச்சரிக்கை
x
வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பல்கலைக்கழக நிர்வாக முடிவுகளை தவறாக திரித்து கூறி, வன்கொடுமை தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக கூறி முன்னாள் துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதி, வன்கொடுமை தடைச் சட்டத்தை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என கூறினார். அதை அனுமதித்தால் அது ஜாதி வெறுப்புணர்வையே அதிகரிக்கும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். வேட்பாளர் தேர்வு முதல் அனைத்தும் ஜாதி ரீதியில் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இந்த முறையை மாற்றாவிட்டால் ஜாதியை ஒழிக்க முடியாது எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்