கல்வித்துறை இடம் சிபிஐக்கு ரூ. 48 கோடிக்கு விற்பனை - தென்னிந்திய மண்டல அலுவலகம் அமைக்கிறது சிபிஐ

சென்னையில் பள்ளி கல்வித் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடம், சிபிஐக்கு 48 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை இடம் சிபிஐக்கு ரூ. 48 கோடிக்கு விற்பனை - தென்னிந்திய மண்டல அலுவலகம் அமைக்கிறது சிபிஐ
x
சென்னையில் பள்ளி கல்வித் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடம், சிபிஐக்கு 48 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எழும்பூரில் பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.  இதன் ஒரு பகுதியில் இயங்கி வந்த கல்வி தொலைக்காட்சி பதிவு நிலையம்  செயல்படாமல்,  புதர் மண்டி கிடந்தது. இந்நிலையில் அந்த இடத்தை,  சிபிஐக்கு 48 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு விற்பனை செய்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடு்த்து, அங்குள்ள பழைய கட்டடங்களை இடித்து வரும் சிபிஐ, அங்கு தென்னிந்திய மண்டல அலுவலகம் அமைக்க திட்டமிட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்