கோயில் வளாகங்களில் கடைகளை அகற்றும் உத்தரவு - இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோயில் வளாகங்களில் கடைகளை அகற்றும் உத்தரவு -  இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
x
பழனி தண்டாயுதபாணி கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு, 7 பேர் தொடர்ந்த வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 36 ஆயிரம்  கோயில்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து  கடை உரிமையாளர்கள் சார்பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடை உரிமையாளர்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, கோயில் வளாகங்களில் அமைந்துள்ள கடைகள் லாப நோக்கம் இல்லாமல்  செயல்படுவதாகவும், பக்தர்களுக்கு சேவை அளிப்பதற்காக நடத்தப்படுவதாகவும் கூறினார். இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவுக்கு  இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்