என்.எல்.சி. சுரங்கத்தில் மண்ணில் புதைந்து அதிகாரி பலி

தோண்டும் பணியை ஆய்வு செய்த போது விபத்து
என்.எல்.சி. சுரங்கத்தில் மண்ணில் புதைந்து அதிகாரி பலி
x
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் அதிகாரி ஒருவர் மண்ணில் புதைந்து உயிரிழந்தார். என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை துணை பொது மேலாளர் ராஜலிங்கம் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது மண் சரிந்ததில், அவர் மண்ணுக்குள் புதைந்தார். இதனை கண்ட மற்ற ஊழியர்கள்,  ராஜலிங்கத்தை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்