35 பவுன் மதிப்பிலான தங்க கட்டியை திருடிய மர்மநபர்கள்

சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
35 பவுன் மதிப்பிலான தங்க கட்டியை திருடிய மர்மநபர்கள்
x
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், பட்டபகலில் நகை கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி மர்மநபர்கள், 35 பவுன் தங்க கட்டிகளை, திருடி சென்றனர். கல்லுக்கட்டி நகை கடை பஜாரில் பாஸ்கரன் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக நகைக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த 2 பேர், தங்க நாணயம் வாங்குவது போல் நடித்து  பாஸ்கரின் கவனத்தை திசை திருப்பி அவரது கடை டிராயரில் வைத்து இருந்த 9 லட்சம்  ரூபாய் மதிப்புள்ள 35  பவுன்  தங்க கட்டியை திருடிச் சென்றனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்