சாதனை புரிந்து வரும் விளையாட்டு விடுதி வீராங்கணைகள் - அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை விளையாட்டு விடுதியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் வீராங்கனைகள், தங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பளுதூக்கும் போட்டியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டுவரும் சினேகா என்ற மாணவி, இதுவரை 8 முறை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.
தமிழக அரசு பின்தங்கிய மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பளுதூக்கும் வீராங்கனைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story