மனநலம் பாதித்தோரை காக்க 6384549613 அழையுங்கள்

திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டோர் குறித்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிறப்பு தொலைபேசி எண் வெளியிட்டுள்ளார்.
மனநலம் பாதித்தோரை காக்க 6384549613 அழையுங்கள்
x
திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்டோர் குறித்து தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிறப்பு தொலைபேசி எண் வெளியிட்டுள்ளார். அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்த அவர் சிறப்பு தொலைபேசியை எண்ணை வெளியிட்டார். கிரிவலப் பாதை, பேருந்து நிலையம், சாலையோரம் உள்ளிட்ட இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோர் இருப்பதாக கூறிய ஆட்சியர் கந்தசாமி, ஆதரவற்றோர், வீட்டை விட்டு வெளியேறியோர் உள்ளிட்டவர்களை மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் உறவினர்களிடம் சேர்க்க ஏதுவாக சிறப்புத் தொலைபேசி எண்ணில் அழைக்குமாறு கூறியுள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அளிக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்