அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் சம்பளம் வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா?
x
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பங்கேற்று வேலைக்கு வராத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு  கடந்த 22 ம் தேதி முதல் கணக்கெடுத்து சனி மற்றும்  ஞாயிற்று கிழமையும் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் பங்கேற்காத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும், நாளைய போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவாதம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றுப் ஆசிரியர்களின் சம்பளம் கருவூலத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், வேலைக்கு வராதவர்களின் சம்பளத்தை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்