அண்ணா பல்கலைக் கழக தேர்வு முறையை மாற்றுங்கள் : மாவட்ட வருவாய் அலுவரிடம் மாணவர்கள் மனு

அண்ணா பல்கலைக் கழக தர மதிப்பீட்டு தேர்வு முறையை மாற்றக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர், கோவையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
அண்ணா பல்கலைக் கழக தேர்வு முறையை மாற்றுங்கள் : மாவட்ட வருவாய் அலுவரிடம் மாணவர்கள் மனு
x
அண்ணா பல்கலைக் கழக தர மதிப்பீட்டு தேர்வு  முறையை மாற்றக் கோரி  இந்திய மாணவர் சங்கத்தினர், கோவையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம்  மனு அளித்தனர். செமஸ்டர் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் அடுத்த, செமஸ்டரில் தேர்வு எழுதலாம் என்ற முறையை 2017 ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் மாற்றியமைத்தது. இந்த புதிய முறையாலும், விடைத்தாள் திருத்தும்  முறை கடுமையாக்கப்பட்டு உள்ளதாலும், தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக உள்ளதாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனை ரத்து செய்யக் கோரி, துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, கோவை வருவாய் அலுவலரிடம் மாணவர்கள் மனு அளித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்