இரும்பு கதவு விழுந்ததில் 6 வயது சிறுவன் பலி

சென்னை போரூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஏழுமலை - லட்சுமி தம்பதியின் 6 வயது மகன், விஷால்.
இரும்பு கதவு விழுந்ததில் 6 வயது சிறுவன் பலி
x
சென்னை போரூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஏழுமலை - லட்சுமி தம்பதியின் 6 வயது மகன், விஷால். ஒன்றாம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுவன், காலையில் பள்ளி செல்ல தயார் ஆன நிலையில் வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது,  இரும்புக்கதவு சிறுவன் மீது விழுந்ததில் தலை நசுங்கி விஷால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்