பள்ளிக்கு திரும்பும் ஆசிரியர்கள் - மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி பாடம் நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பள்ளிக்கு திரும்பும் ஆசிரியர்கள் - மாணவர்கள் மகிழ்ச்சி
x
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த பல பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 85 சதவீத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும், 65 சதவீத துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமல் பாடம் நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலும் 95 சதவீத அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, ஆசிரியர்கள் மீண்டும் பாடம் எடுக்க துவங்கியுள்ளனர்.  இதனால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்