அரசு ஊழியர்களின் 9 கோரிக்கைகள் என்னென்ன...?

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் என்ன?
அரசு ஊழியர்களின் 9 கோரிக்கைகள் என்னென்ன...?
x
* 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் 

* இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட வேண்டும் 

* ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும், கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்க வேண்டும் 

* சிறப்பு காலமுறை சம்பளம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட வேண்டும் 

* 21 மாத சம்பள மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு உடனே வழங்கப்பட வேண்டும் 

* தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை படுத்தி சம்பளம் வழங்க வேண்டும் 

* அரசாணை எண்.56ல் இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்ய வேண்டும், 5000 அரசுப் பள்ளிகள் மூடுவதை உடனே கைவிட வேண்டும் 

* 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் கைவிட வேண்டும் 

* அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.... 


Next Story

மேலும் செய்திகள்