இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடம் - புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்டித்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சிறுமுர் கிராமத்தில் கடந்த, 1996 ஆம் ஆண்டு முதல் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு முதல், 277 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியில், 2 கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து சேதமாகியுள்ளது. இதனால், 100 பேர் அமர வேண்டிய வகுப்பில் 277 பேர் பயின்று வருகின்றனர். போதிய இடம் இல்லாததால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். எனவே, புதிய கட்டிடம்  கட்டித் தர வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்