ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு : மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு : மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, 
தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில், தஞ்சை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்,  ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை : சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் செங்குன்றம் அருகே கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பம்பத்துகுளம் ஊராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்