உணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சோழிங்கநல்லூரில், உணவில் உயிருடன் எலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
பிரபல தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவில் எலி ஒன்று உயிருடன் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உணவில் கரப்பான் பூச்சி, எலி, குடிக்க வைக்கப்படும் நீரில் தவளை மிதப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார். சம்பந்தப்பட்டவர்களிடம் இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் பலனில்லை எனக் கூறும் மாணவர்கள், சுகாதாரமான உணவுகள் வழங்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்