பத்ம விருதுகள் பெறுவோருக்கு விஜயகாந்த் வாழ்த்து

பத்ம ஸ்ரீ விருது பெற உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகள் பெறுவோருக்கு விஜயகாந்த் வாழ்த்து
x
பத்ம ஸ்ரீ விருது பெற உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை சின்னப்பிள்ளை, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். பத்ம பூஷன் விருது பெற உள்ள மோகன்லால், பத்மஸ்ரீ விருது பெற உள்ள பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோருக்கும் தனது வாழ்த்துக்களை விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்