பழனி : மின்கம்பம் மீது மோதிய தனியார் பேருந்து

பழனியில், தனியார் பேருந்து ஒன்று மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பழனி : மின்கம்பம் மீது மோதிய தனியார் பேருந்து
x
பழனியில், தனியார் பேருந்து ஒன்று மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். அங்குள்ள ஸ்டேட் பாங்க் சாலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மடத்துக்குளத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று அந்த வழியில் சென்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து, அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் அந்த மின்கம்பம் உடைந்து பேருந்தின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்