இலங்கையில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தல் : ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 36 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தல் : ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
சென்னை விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 36 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு திரும்பிய சென்னையை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது அவர்கள் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. நான்கு பேரிடம் இருந்து ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடைக் கொண்ட 11 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்