குமரியில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில்

குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
குமரியில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலை போல் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயில் குடழுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏழுமலையான் கோயிலை கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் 22 கோடி ரூபாய் மதிப்பில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் குடமுழுக்கு விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதில் திருப்பதி கோயில் தலைமை செயல் அதிகாரி அனில்குமார் சிங்கலால் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்