"ஆதார் பயோமெட்ரிக் பதிவுகள்" - நீதிமன்றத்தில் பத்திரப்பதிவுத்துறை தகவல்

"பத்திர பதிவுக்கு பயன்படுத்த முடிவு"
x
ஆதாருக்காக பெறப்பட்ட பயோமெட்ரிக் விவரங்களை பத்திர பதிவுக்கு பயன்படுத்த இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது 
இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தாக்கல் செய்த அறிக்கையில், பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை குறைக்கவும், இடைத்தரகர்களை ஒழிக்கவும் ஸ்டார் 2.0 என்ற இணைய அடிப்படையிலான மென்பொருளை அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய வசதியை பயன்படுத்தி, பொதுமக்களே ஆவணங்களை தயார் செய்ய முடியும் என்றும், பிறர் நிலத்தை ஆள்மாறட்டம் செய்து விற்பதை  தடுக்க, விற்பவரின் கைரேகையை சரிபார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாருக்காக பெறப்பட்ட பயோமெட்ரிக் விவரங்களை பத்திர பதிவுக்கு பயன்படுத்த இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது 

* பத்திர பதிவு  துறையில் ஊழலை குறைக்க மற்றும் வெளிப்படைத்தன்மையை  பின்பற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு பத்திரப்பதிவு துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

* இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தாக்கல் செய்த மனுவில், பத்திர பதிவுத்துறை சேவைகளை எளிமைபடுத்தவும், ஆள்மாறாட்டத்தை தடுக்கவும், ஆவணங்களை மோசடியாக திருத்துவதை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

* பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை குறைக்கவும், இடைத்தரகர்களை ஒழிக்கவும்  ஸ்டார் 2.0 என்ற இணைய அடிப்படையிலான மென்பொருளை அமல்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* புதிய வசதியை பயன்படுத்தி, பொதுமக்களே ஆவணங்களை தயார் செய்ய முடியும் என்றும், இதன் மூலம் கடந்த 23 ந்தேதி வரை 20 லட்சம் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* பிறர் நிலத்தை ஆள்மாறட்டம் செய்து விற்பதை தடுக்க, விற்பவரின் கைரேகையை சரிபார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் ,

* அரசு நிலங்களை மற்றவர்கள் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க வருவாய் துறையின் தமிழ் நிலம் என்னும் செயலி, பத்திரப்பதிவுக்கான மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஆதாருக்காக பெறப்பட்ட பயோ-மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த, 2 ஆயிரத்து 725 கருவிகள் வாங்க 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், 

* பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்த  வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

Next Story

மேலும் செய்திகள்