குடிப்பழக்கம், வறுமைக்கு எதிராக போராடுவேன் - மதுரை சின்னப்பிள்ளை

குடிப்பழக்கம், வறுமை ஆகியவற்றுக்கு எதிராக தமது போராட்டம் தொடரும் என மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார். அழகர்கோவிலை அடுத்த பில்லுசேரி கிராமத்தில் வசிக்கும் அவர், பெண்களை ஒன்று திரட்டி சேமிப்பை தொடங்கி பண நிரவல் செய்து முன்னோடியாக திகழ்ந்ததால், காலில் விழுந்து வணங்கிய மறைந்த பிரதமர் வாஜ்பாய், சக்தி புரஷ்கார் விருது கொடுத்து பெருமைபடுத்தினார். அவரது தொடர் சேவைப் பாராட்டி தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித ஆடம்பரமும் இன்றி, எளிய வாழ்க்கை வாழும் சின்னப்பிள்ளை, குடிப்பழக்கம், வறுமை ஆகியவற்றுக்கு எதிராக தமது போராட்டம் தொடரும் என தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்