நிப்பான் பெயிண்ட் நிறுவனம் நடத்திய - ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது போட்டி

சிறப்பாக வடிவமைத்த 2 பேருக்கு தலா ரூ.50,000 பரிசு
நிப்பான் பெயிண்ட் நிறுவனம் நடத்திய - ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது போட்டி
x
சென்னை கிண்டியில் நிப்பான் பெயிண்ட் நிறுவனம், சார்பில் ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள 1300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய நிப்பான் பெயிண்ட் குழும தலைவர் மகேஷ் ஆனந்த் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கட்டிட வடிவமைப்பு, தொழில்நுட்பம் போன்றவற்றில் எப்படி செயல்படுவது என்பதை பற்றி மாணவர்கள் விளக்கினார்கள். பின்னர், ஆசிய இளம் வடிவமைப்பாளர் விருது புனே கல்லூரி மாணவர் தன்யா போத்ரா, டெல்லி கல்லூரி மாணவி பவ்யா ஆகியோருக்கு தலா  50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக வடிவமைத்த 20 மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்